அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள
'தெறி' படத்தின் டீசர் நள்ளிரவு 12 மணிக்கு யு டியூபில் வெளியானது. இந்த
டீசரின் வரவுக்காகவே காத்திருந்தது போல விஜய் ரசிகர்கள் டீசரை தெறிக்க
விட்டுவிட்டார்கள். 'வேதாளம்' படத்தின் டீசரை விட 24 மணி நேரத்திற்குள்
அதிக லைக்குகளைப் பெற்று 'தெறி' டீசர் புதிய சாதனையை படைத்துள்ளது.
'வேதாளம்'
டீசர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக 10 மணி நேரத்திற்குள் 79,000
லைக்குகளைப் பெற்றது. ஆனால், 'தெறி' டீசர் அதே 10 மணி நேரத்திற்குள்
1,20,000 லைக்குகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. மேலும்,
'வேதாளம்' டீசர் இதுவரை வாங்கியுள்ள 1,40,000 லைக்குகளை இன்னும் சில மணி
நேரத்திற்குள் 'தெறி' டீசர் கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு இன்னும் சில மணி நேரங்களுக்குள் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தும்
'தெறி' டீசர் மற்றுமொரு சாதனையைப் படைக்கப் போகிறது.