Proud to be an Indian. Happy Republic Day...!! | இந்த குடியரசு தினத்தில் அனைவரும் வாழ்வில் வளமும் நலமும் பெற வாழ்த்துகள்!


Thousands of people laid down their lives..so that our country breath Today..never forget their sacrifice..Happy Republic day 

We are Indians, firstly and lastly.Happy Republic Day..

I love my India, not because it is great, but because it is my own Country..

Proud to be an Indian. Happy Republic Day...!!

இந்தியா (India) அல்லது அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு, தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கித்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 110 கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.
இந்தியக்கொடியில் மலர்களைப்பொதித்து வைத்து உயரமான கம்பத்தின் உச்சியில் அதனை கட்டி பின் விழாவின் போது கொடிக்கயிற்றை இழுத்து பல வண்ணப்பூக்கள் பொழிய பட்டொளி வீசி இந்திய மூவர்ணக்கொடியை பறக்கவிட்டு அனைவரும் பரவசப்படும் நாள்!!.
உலக நாடுகள் ஒரே ஒரு முறை சுதந்திரம் பெற்ற நாளை மட்டும் கொண்டாடும் போது இந்தியர்களாகிய நாம் இருமுறை கொடியேற்றி இறக்கிக்கொண்டு உள்ளோம்.
இன்று நம் நாட்டின் ஆயுத பலத்தை காட்டும் விதத்தில் படை அணிவகுப்பு, இந்தியத்தலைநகரில் நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெறும்..
மாநிலங்களில் மாவட்ட சாதனை விளக்க அலங்கார ஊர்திகள் மற்றும் சிறந்த சேவை புரிந்தோர்க்கான விருதுகள், பாரட்டுகள், பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் என இந்தியா விழாக்கோலம் காணும் நாள் இது.
பள்ளிக் குழந்தைகளுக்கோ மூவர்ணகொடியை சட்டையில் அணிந்து, கொடியேற்ற பள்ளி சென்று, இனிப்பு மிட்டாய்கள் தின்ற பின் விடுமுறை சந்தோஷத்தையும் அனுபவிக்கும் நாள்..
குடியரசு தினம் மலர்ந்த காரணம்
1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், "பூரணசுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்" என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த 'எங்கு, எப்போது எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.
அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பகு குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.
1930, ஜனவரி 26-ம் தேதி- முதல் குடியசு தினம்!
முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அன்றைய தினம் நகர்ப் புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.
ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான்.
"நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்." ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பாக அவ்வாசகம் அமைந்திருந்தது.
அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான்... சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949-ல் நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது 1950-ல்! இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.
ஓங்கி வளர்ந்த கம்பம்தனில் பூக்களைக் கொட்டிக் கட்டி வைத்த கொடிக் கயிறின் முடிச்சு அவிழ்வதற்கு எத்தனை, எத்தனை தியாகிகளின் மனைவிமார்கள் தங்கள் தாலிக் கொடியை இழந்து இந்த வீர சுதந்திரத்தை வாங்கித் தந்திருக்கிறார்கள் என்று இந்த நாளில் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!
சுதந்திரமாகப் பறக்கத் துடி துடிக்கும் மூவர்ணக் கொடி உதிர்க்கும் மலர்கள் தியாகிகளின் மனைவியரின் கூந்தலிலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்பட்ட மலர்கள் என்று நம் பிள்ளைகளுக்கு அதன் வலியை உணரச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இந்த குடியரசு தினத்தில் அனைவரும் வாழ்வில் வளமும் நலமும் பெற வாழ்த்துகள்!