அஜித் ஸ்டைலில் நடிக்கும் விஜய்!



விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்துள்ளது. விஜய் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் விஜய் இரு கெட்டப்புகளில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்களில் விஜய் ஒரே கெட்டப்புகளில் இருக்கிற மாதிரியான புகைப்படங்களே வெளிவந்தன.

ஆகவே, இன்னொரு கெட்டப் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். படக்குழுவினரும் விஜய்யின் புதிய கெட்டப்பை வெளியிட வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தனர்.
ஆனால், தற்போது விஜய்யின் புதிய கெட்டப் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த படத்தில் விஜய் மொட்டைத் தலையில் சற்று முடி வளர்ந்துள்ளது போன்ற ஒரு கெட்டப்பில் வருகிறார். இந்த கெட்டப்புடன் அவர் ரசிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒனறு தற்போது சமூக இணையதளங்களில் பரவி வருகிறது.

அஜித் ‘ரெட்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களில் மொட்டைத் தலையுடன் நடித்திருந்தார். அஜித்தின் இந்த கெட்டப்பை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர். தற்போது விஜய்யும் அதுபோல் ‘தெறி’ படத்தில் நடித்திருப்பதால், அவருக்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்பப்படுகிறது.

இந்த கெட்டப்புடன் விஜய் நடித்த காட்சிகள் எல்லாம் லடாக்கில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு வட்டாரங்களில் கூறப்படுகிறது.