மீண்டும் தள்ளிப்போன தெறி டீஸர் ரிலீஸ்....காரணம் என்ன?

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் தெறி. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ். இப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு தினங்களுக்கு முன் முடிவடைந்தது.

படத்தின் டீஸர் பொங்கல் சிறப்பாக வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் சில தொழில்நுட்பக் காரணங்களால் தள்ளிப்போனது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தின சிறப்பாக வெளியாகும் என்ற நிலையில் தற்போது மீண்டும் தள்ளிப்போடப்பட்டுள்ளது.


அதிகாரப்பூர்வமாக டீஸர் குறித்த செய்திகள் ஏதும் வெளியாகாத நிலையில் படத்தின் டீஸர் பிப்ரவரி முதல் வாரத்தில் வரும் என நெருங்கிய வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. டீஸரை மாஸ், கிளாசாக உருவாக்கும், முயற்சியாலும், மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதாலேயே தள்ளிப்போவதாகச் சொல்லப்படுகிறது.