பிரமாண்டமாக நடைபெறவுள்ள தெலுங்கு புலி பாடல்கள் வெளியீடு


நடிகர் விஜய், நடிகைகள் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நடிகர் சுதீப் ஆகியோர் நடித்துள்ள புலி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன.

அக்டோபர் 1 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவரும் இப்படத்தின் தமிழ் பாடல்கள் வெளியீட்டு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதே போல் புலி படத்தின் தெலுங்கு பாடல்கள் வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 புலி படத்தின் தெலுங்கு பட உரிமையை வாங்கியுள்ள எஸ்.வி.ஆர் மீடியா நிறுவனம் புலி படத்தின் தெலுங்கு பாடல்கள் வெளியீட்டு விழாவை செப்டம்பர் 19 ஆம் தேதி ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

 இவ்விழாவில் புலி படக்குழுவினருடன் கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் பிரபலங்கள் கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.