ஹிந்தியில் முதல் படம்! கலக்கும் புலி


சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்து விரைவில் வெளிவர உள்ள புலி படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த படம் மேலும் பல புதுமைகளை படைக்க உள்ளது.

ரொமான்டிக் மற்றும் கமர்ஷியல் வகையிலான படங்களில் மட்டுமே விஜய், முதன்முறையாக சரித்திர பின்னணி கொண்ட படத்தில் நடித்துள்ளார். டோலிவுட்டில் வெற்றி பெற்ற படங்களின் உரிமைகளை வாங்கி, அதை தமிழில் ரீமேக் செய்து, கோலிவுட்டில் பெரும்வெற்றி பெற்ற படங்களாக மாற்றிய பெருமை, விஜயையே சாரும்.

 இந்நிலையில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புலி படம், முதன்முறையாக ஹிந்தியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகியுள்ள புலி படத்திற்கு, நடிகை ஸ்ரீதேவி, மூன்று மொழிகளிலும் அவரே டப்பிங் பேசியுள்ளார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்ரீதேவி, தமிழ்ப்படத்தி்ல் டப்பிங் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக, சென்னையில் அவர் தங்கியிருந்து டப்பிங் பேசி குடுத்துள்ளார். 

படத்தின் ஹீரோயின்களான ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசனின் சம்பளத்தை விட, ஸ்ரீதேவிக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது