அஜித்தை முந்தி, சல்மான் கானை நெருங்கும் விஜய்

இணைய உலகில் நிகழ்த்தப்படும் சாதனைகள் எல்லாம் பாலிவுட்டுக்கு மட்டுமே சொந்தமாகவே உள்ளன. அதை மாற்றும் நிகழ்வுகள் கோலிவுட்டிலும் நடைபெற ஆரம்பித்துள்ளன.

உதாரணத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கானின் படம் ஒரு சாதனை படைத்திருந்தது. இந்த சாதனையை இந்திய அளவில் வேறு எந்த நடிகரும் இதுவரை செய்தததில்லை என்பதே நேற்றுவரையிலான நிலவரம். இதுவிரைவில் மாறக்கூடிய சூழல் தெரிகிறது.

சல்மானின் சாதனைக்கு மிக நெருக்கத்தில் வந்தார் நடிகர் அஜித். பின்னர் அவரும் கூட சல்மானின் அந்த சாதனையை முறியடிக்கவில்லை. அவருக்குப் பிறகு தற்போது விஜய்யே அந்த சாதனையை படு வேகமாக நெருங்கி வருகிறார். அப்படி என்ன சாதனை?

2014ல் வெளிவந்த சல்மான் கானின் 'கிக்' படத்தின் டிரைலர் யு டியூப்பில் 1 லட்சம் லைக்குகளைப் பெற்று சாதனை படைத்தது. இதுவரை வேறு எந்த இந்திய மொழி திரைப்படத்தின் டிரைலர் மற்றும் டீஸர்கள் எதுவுமே இந்த சாதனையை நெருங்கவில்லை.

அஜித்தின் 'என்னை அறிந்தால்' டீஸர் கிக் படத்துக்கு அடுத்தபடியாக 95 ஆயிரம் லைக்குகள் பெற்றது.

விஜய் நடித்த 'புலி' படத்தின் டிரைலர் தற்போது 98 ஆயிரம் லைக்குகளைப் பெற்று அஜித் பட சாதனையை முறியடித்து இருக்கிறது.

இன்னும் 2000 லைக்குள் பெற்றால்சல்மானின் கிக் சாதனை முறியடித்துவிடும். புலி படம் ரிலீஸாவதற்குள் 1 லட்சம் லைக் சாதனை நிகழவாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் சல்மான் கானுக்குப் பிறகு இந்த சாதனையைச் செய்தவராக விஜய் இருப்பார்.