புலி படத்திற்கு யு சான்று! உற்சாகத்தில் ரசிகர்கள்!


கத்தி படத்திற்கு பிறகு இளைய தளபதி விஜய் நடித்துள்ள படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹான், ஹன்சிகா, நான் ஈ சுதீப், ஸ்ரீதேவி, பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று தணிக்கைக் குழுவினர் படம் பார்த்தனர். பின்னர் படத்துக்கு க்ளீன் யு சான்று அளித்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும்படியான ஒரு கதை என்பதால் எந்த சிக்கலுமின்றி யு சான்று அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 1ம் தேதி உலகெங்கும் அதிக அரங்குகளில் புலி படத்தை கோலாகலமாக வெளியாகவுள்ளது