விஜய் 59 படத்திற்கு பெயர்?
இயக்குநர் அட்லீ இயக்கத்தில், விஜய், சமந்தா நடித்துவரும் படத்திற்கு, ரஜினிகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற மூன்றுமுகம் பெயர் வைக்கப்பட இருப்பதாக தகவல், கோலிவுட்டில் வைரலாக பரவி வருகிறது.
சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள புலி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. புலி படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணியின் போதே, விஜய், அட்லீ இயக்கத்திலான படத்தில் நடிக்க துவங்கிவிட்டார்.
படத்திற்கு பெயர் வைத்து படப்பிடிப்பை துவங்கிவந்த நிலையில், நடிகர் அஜித்குமார் இந்த வழக்கமான பழக்கத்தை மாற்றியமைத்தார். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான என்னை அறிந்தால் படத்தின் தலைப்பும் கூட, படப்பிடிப்பு, பாதிக்கு மேல் முடிவடைந்திருந்த நிலையிலேயே வைக்கப்பட்டது. சிறுத்தை, வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம், தீபாவளிக்கு வெளிவர உள்ள நிலையில், இன்னும் அதற்கு பெயர் வைக்கப்படாமல், தல 56 என்றே அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த நடைமுறையை, தனுஷூம் பின்பற்றத் துவங்கிவிட்டார். வேலையில்லா பட்டதாரி தொழில்நுட்பக்கலைஞர்களுடன் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காமல் வி.ஐ.பி.-2 என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
இயக்குநர் அட்லீயும் தற்போது அப்பாணியை பின்பற்றத் துவங்கியுள்ளார். கேரள ஹவுசில், இப்படத்தின் பூஜையின்போதே, படத்தின் பெயரையும் அறிவிப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், படத்தின் தலைப்பு அப்போது அறிவிக்கப்படவில்லை. அப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது சில கட்டங்களையும் தாண்டியுள்ளது. இன்னும் படத்திற்கு தலைப்பு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இப்படத்திற்கு, ரஜினி நடித்த "மூன்று முகம்" தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்திலான இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன நடிக்க உள்ளனர். மூத்த இயக்குநர் மகேந்திரன், முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
விஜய் 59 படத்திற்கு மூன்று முகம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வைரலாக பரவிவரும் நிலையில், அப்படக்குழுவினர் மவுனம் காத்துவருகின்றனர். அவர்கள் வாய் திறந்தால் தான், வதந்தீயாய் பரவும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்!!!..