3 மொழிகளிலும் ஒரேநாளில் ரிலீசாகும் விஜய்யின் புலி!


விஜய் நடித்த படங்களுக்கு தமிழ்நாட்டில் எப்படி ஓப்பனிங் இருக்குமோ அதே அளவுக்கு கேரளாவிலும் இருக்கும். இங்குள்ள ரசிகர்கள் கட்அவுட் கட்டி ஆரவாரம் செய்யும் அதே நிலை கேரளாவிலும் உள்ளது. அதனால்தான் விஜய் படங்கள் கேரளாவிற்கும் பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது.

ஆனால் தலைவா படம் தமிழ்நாடு, கேரளாவில் வெளியானது போன்று ஆந்திராவிலும் ரிலீசாகி வெற்றியும் பெற்றது. அதையடுத்து ஜில்லா வெளியானது. கத்தி ஆந்திராவில் ரிலீசாக தயாராகிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிரமாண்ட படமான புலி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் வாழும் விஜய் ரசிகர்கள் புலியை வரவேற்க ஆயத்தமாகி விட்டனர். அதேபோல், தமிழ் தவிர மற்ற மொழிகளில் அந்தந்த மொழிகளுக்கு டப் செய்யப்பட்ட வெளியாகும் புலி படம் கேரளாவில் மட்டும் தமிழ் பதிப்பாகவே வெளியாகிறது.

 விஜய் படம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் தயாராகி கேரளாவில் வெளியாகும் அனைத்து படங்களுமே தமிழில்தான் அங்குள்ள தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.