விக்ராந்த் நாயகனாக நடித்திருக்கும் 'தாக்க தாக்க' படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
சஞ்சீவ் இயக்கத்தில் விக்ராந்த், அரவிந்த் சிங், ராகுல் வெங்கட், அபிநயா, லீமா, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'தாக்க தாக்க'. பிஜாய் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சுஜித் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வெர்சடைல் ஸ்டூடியோ தயாரித்திருக்கும் இப்படத்தை தாணு வெளியிடுகிறார். இப்படம் நாளை (ஆகஸ்ட் 28) வெளியாக இருக்கிறது.
இப்படத்தை விஜய்க்கு திரையிட்டு காட்டினார்கள். "படத்தின் முதல் பாதி கதை சார்ந்து மிக அருமையாக இருந்தது. நான் இரண்டாம் பாதியை மிகவும் ரசித்தேன். அதிலும் கடைசி 40 நிமிட காட்சிகள் அருமை. விக்ராந்த் இரண்டாம் பாதியில் மிக நன்றாக நடித்திருக்கிறார். சந்தோஷமாக இருக்கிறது. அவர் கண்டிப்பாக ஜெயிப்பார்." என்று தெரிவித்திருக்கிறார் விஜய். விக்ராந்த் விஜய்யின் உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் தங்கள் நண்பன் விக்ராந்துக்காக விஷால், ஆர்யா, விஷ்ணு விஷால் ஆகியோர் ஒரு பாடலுக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.