ரஜினி இடத்தில் விஜய்!



விஜய்யின் புலி படம் செப்டம்பர் 17 விநாயகர்சதுர்த்தியன்று வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது திடீரென அக்டோபர் ஒன்றாம் தேதிக்குத் தள்ளிவைத்துவிட்டார்கள்.

செப்டம்பர் 17 க்குள் படத்தின் வேலைகள் முடிவடையாது என்பதால் படவெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. இது அந்தப்படக்குழுவினரே எதிர்பாராமல் நடந்த நிகழ்வு என்றாலும், 2010 ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ரஜினியின் எந்திரன் வெளியானதை வைத்து ரஜினி படத்தின் வெளியீட்டுத்தேதியை விஜய் படக்குழுவினர் பிடித்துவிட்டார்கள் என்று சொல்லத்தொடங்கிவிட்டார்கள்.
அதே போல ஏற்கெனவே தயாராகிவிட்ட சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்துக்குச் சரியான வெளியீட்டுத் தேதியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். இப்போது புலி தள்ளிப்போய்விட்டதாலும் விடுமுறைநாட்கள் இருப்பதாலும் அந்தத் தேதியில் ரஜினிமுருகன் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதனால் விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துக்கொண்டார் என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். ஒரு படத்தை ரிலீஸ் பண்ணுவதே பெரும்பாடு என்று படக்குழுவினர் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் கற்பித்துக்கொண்டிருக்கிறது இணையஉலகம்.