இந்தி படத்தில் விஜய் பாட்டு!


தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி இசையமைப்பாளர்களாக இருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், எஸ்.எஸ்.தமன் ஆகிய இருவரும் தாங்கள் தமிழில் ஹிட்டாக கொடுத்த டியூன்களை தெலுங்கிற்கும், தெலுங்கில் ஹிட்டான டியூன்களை தமிழுக்கு மாறி மாறி பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், விஜய்யின் சச்சின், வில்லு படங்களைத் தொடர்ந்து தற்போது புலி படத்துக்கு இசையமைத்துள்ள தேவி ஸ்ரீபிரசாத், வில்லு படத்தில் தனது இசையில் உருவாகி சூப்பர் ஹிட்டான, டாடி மம்மி வீட்டில் இல்லை தடைபோட யாருமில்லை -என்ற பாடலை இப்போது இந்தி படத்துக்கும் யூஸ் பண்ணப்போகிறாராம்

வில்லு படத்தில் இடம்பெற்ற அந்த பாடலை அதன்பிறகு தெலுங்கில் தான் இசையமைத்த சங்கர் தாதா ஜிந்தாபாத் என்ற படத்துக்கும் பயன்படுத்திய தேவி ஸ்ரீபிரசாத், இப்போது இந்தியில் பாக் ஜானி என்ற படத்திற்கும் பயன்படுத்துகிறார்.

அந்த பாடலின் ஆண்குரலை தானே பின்னணி பாடும் அவர், பெண் குரலை தாக்க தாக்க படத்தில் நடித்த மம்தா மோகன்தாஸை பாட வைக்கிறாராம். தமிழ், தெலுங்கில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான டாடி மம்மி வீட்டில் இல்லை பாடல் இந்தியிலும் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று நினைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்,


இந்த டியூனை இன்னும் பல மொழிப்படங்களுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளாராம். காரணம், மொழிபேதமில்லாமல் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரக்கூடிய ஈர்ப்பு அந்த டியூனில் இருப்பதாகவும் சொல்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.