புல்லரிக்க வைக்கும் புலி படத்தின் டிரெய்லர்!



சென்னை: ஒருவழியாக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புலி படத்தின் டிரெய்லர் நேற்று நள்ளிரவில் வெளியாகி விட்டது, டிரெய்லர் வெளியாகும் வரை #PuliTrailerCountdownBegins என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தொடர்ந்து அதனை ட்விட்டரில் ட்ரெண்டாக்கிக் கொண்டிருந்தனர் விஜய் ரசிகர்கள்.

சுமார் 1 நிமிடம் 54 நொடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லரை சரியாக 12 மணிக்கு வெளியிட்டு புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது சோனி மியூசிக், வெளியான  இதுவரை சுமார் 1,742,853 பேர் பார்த்து ரசித்துள்ளனர். சுமார் 60,291 பேர் டிரெய்லரை லைக் செய்து இருக்கின்றனர் 11496 பேர் டிரெய்லரை டிஸ்லைக் செய்து இருக்கின்றனர். இன்று முதல் சுமார் 3000 க்கும் அதிகமான திரையரங்குகளில் புலி டிரெய்லர் திரையிடப்பட உள்ளது. புலி டிரெய்லர் வெளியானது முதல் ஏகப்பட்ட ரசிகர்கள் அதனைக் கண்டுகளித்து தான் பெற்ற இன்பத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்