“1200 தியேட்டர்களில் டிரைலர். தெலுங்கு தேசத்திலும் சாதனை செய்கிறது புலி”
பொதுவாக ஒரு படத்தை ரிலீஸ் செய்யும்போதுதான் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்து சாதனை படைக்க வேண்டும் என ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் விரும்புவார்கள். ஆனால் இளையதளபதி விஜய்யின் 'புலி' விஷயத்தில் டிரைலரையே அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்து சாதனை செய்ய 'புலி' படத்தின் தெலுங்கானா மற்றும் ஆந்திர உரிமை பெற்ற SVR Media P Ltd நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மொத்தம் 1200 தியேட்டர்களில் புலி படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், தெலுங்கு சூப்பர் ஸ்டார்களின் படங்களின் டிரைலர் கூட இந்த அளவுக்கு அதிகமான தியேட்டர்களில் இதுவரை ரிலீஸ் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா, ராகுல் ப்ரதீப்சிங் நடித்த 'கிக் 2' திரைப்படம் வரும் வெள்ளியன்று இரு மாநிலங்களிலும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இடைவேளையில் 'புலி' படத்தின் தெலுங்கு டிரைலர் திரையிடவும் படக்குழுவினர் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.